Regional02

கமுதி அருகே - கரோனாவுக்கு மூதாட்டி மரணம் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து சுகாதாரத் துறையினர் மூதாட்டியின் குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்தமானிலிருந்து ஆண் ஒருவர் பரமக்குடி வைகை நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில், தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT