Regional02

கணவன், மனைவி தற்கொலை :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கணவன், மனைவி விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.

கீழப்பழுவூரை அடுத்த பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா(42). மரம் வெட்டும் கூலித் தொழிலாளியான இவர், குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று விஷமருந்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த அவரது மனைவி பரிமளா(32), கருப்பையா குடித்து விட்டு மீதம் வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பரிமளாவை மீட்டு, அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவன், மனைவி அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT