Regional03

முதல்வரின் பிரச்சார கூட்டத்துக்கு வந்த ஆட்டோ கவிழ்ந்து 22 பேர் காயம் :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசனை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சோற்றுத்துறை கிராமத்திலிருந்து 2 ஆண்கள் உட்பட 30 பேர் சுமை ஆட்டோவில் சென்றனர்.

வீரசிங்கம்பேட்டை என்ற இடத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆயிராசு, பாப்பாத்தி, தனம், தாமரைச்செல்வி, மாலதி, துரைசாமி, மல்லிகா, ஜெயந்தி உட்பட 22 பேர் காயமடைந்தனர். அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT