திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அமமுக, மநீம கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன் திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் உடனிருந்தார்.
செய்தியாளர்களிடம் ஏஎல்எஸ் லெட்சுமணன் கூறும்போது, “எதிர்க்கட்சி எம்எல்ஏவாக மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துள்ளேன். தொகுதி நிதி முழுவதையும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட்டுள்ளேன். தொகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்க, தொழில்கள் தொடங்க முயற்சி மேற்கொள்வேன்” என்றார்.
இத் தொகுதியில் அமமுக வேட்பாளர் பால்கண்ணணும் மனு தாக்கல் செய்தார். மேலும், சுயேச்சை வேட்பாளர்களாக ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் மாநில செய்தி தொடர்பாளர் சி.எம். ராகவன், மேலதாழையூத்தைச் சேர்ந்த ப.இசக்கிமுத்து, மாரியப்ப பாண்டியன், திருநெல்வேலி சந்திப்பு மு. கருப்பசாமி, தளபதிமுருகன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
பாளையங்கோட்டை
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் பிரேம்நாத் மனு தாக்கல் செய்தார். அவர் கூறும்போது, “பாளையங்கோட்டை தொகுதியில் வரும் 30-ம் தேதி கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவுள்ளார்” என்றார்.
இத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட காளை ரசூல்மைதீன் மனு அளித்தார்.
ராதாபுரம்
இத் தொகுதியில் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் எம்.சந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
நாங்குநேரி
அம்பாசமுத்திரம்