சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சுயேச்சையாக பலரும்வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அந்த மனுவில் தாங்கள் கேட்கும் மூன்று சின்னங்களை முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிட வேண்டும். இதில் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.
இதற்காக தேர்தல் ஆணையம்சார்பில் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். இந்தபட்டியல் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும் விளம்பர பலகையில் ஒட்டி வைக்கப்படும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 200 சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் சின்னங்களின் பெயர் பட்டியல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழில்இல்லை. அதுபோல சின்னங்களின் பெயர்கள் மட்டுமே உள்ளது. சின்னங்களுக்கான படங்கள் இல்லை.
இதனால் தமிழில் வேட்புமனுவை பூர்த்தி செய்யும் சுயேச்சைவேட்பாளர்கள் சரியான சின்னங்களின் பெயர்களை மனுவில் குறிப்பிட முடியாமல் குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
சின்னங்களின் பெயர் பட்டியலை படங்களுடன் தமிழில் உடனடியாக வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுயேச்சை வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 200 சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.