TNadu

அம்மாபேட்டை பள்ளி மாணவிகளின் - பெற்றோர்களில் மேலும் 6 பேருக்கு கரோனா : மற்றொரு அரசுப் பள்ளி ஆசிரியைக்கும் தொற்று உறுதி

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் பள்ளி மாணவிகளின் பெற்றோர்களில் மேலும் 6 பேருக்குகரோனா தொற்று உள்ளது நேற்று உறுதியானது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவி பெறும்மேல்நிலைப் பள்ளியில் ஏற்கெனவே 56 மாணவிகள், ஒரு ஆசிரியைஎன 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மாணவிகளின் பெற்றோர் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தெரியவந்தது. அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதி

ஆசிரியைக்கும் கரோனா

SCROLL FOR NEXT