Regional02

தருமபுரி, கிருஷ்ணகிரியில் நேற்று 14 பேர் வேட்புமனு தாக்கல் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. 15-ம் தேதி அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 19 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஊத்தங்கரையில் நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. தளி தொகுதியில் போட்டியிட நேற்று வரை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் நேற்று வேட்பாளர்கள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வில்லை. மை இந்தியா பார்ட்டி, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் ஆகியோர் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் 6 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT