Regional01

திருப்பத்தூர் கிளை சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம் :

செய்திப்பிரிவு

காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் (52) மார்ச் 10-ம் தேதி இரவு நாடக மேடையில் தூங்கிக் கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீலகண்டனை கைது செய்து திருப்பத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று நீலகண்டனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT