Regional03

நத்தம் அதிமுக வேட்பாளர் மீது போலீஸில் புகார் :

செய்திப்பிரிவு

தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக அதிமுக வேட்பாளர் மீது எழுந்த புகார் குறித்து தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு அலுவலர் நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முளையூர் ஊராட்சி புன்னபட்டி, காட்டுவேலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக வீடியோ ஆதாரம் வெளியானது. இதுகுறித்து தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு அலுவலர் மைக்கேல் ஆரோக்கியதாஸ் நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நத்தம் இன்ஸ்பெக்டர், நத்தம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். நீதித்துறை அனுமதி அளித்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸார் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

SCROLL FOR NEXT