புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி பரமநகரைச் சேர்ந்தவர் என்.கனகராஜ். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படாததை அதிமுகவை கண்டித்து, வடகாட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் அ.வெங்கடாசலம் நினைவிடம் முன்பு நேற்று இரவு அதிமுக வேட்டிகளை தீ வைத்து கொளுத்தினார். அப்போது, அதிமுக மற்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைக் கண்டித்து கோஷம் எழுப்பினார்.