சென்னை எழும்பூர்- மன்னார்குடி சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை-மன்னார்குடி இடையே ரயில்பாதை மின்மயமாக்கும் பணி நடைபெறுவதன் காரணமாக, சென்னை எழும்பூர்-மன்னார்குடி சிறப்பு ரயில் (வண்டி எண்.06179) இயக்கப்படும் நேரம் இன்று (மார்ச் 17) முதல் மாற்றப்படுகிறது.
இதன்படி, இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 10.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.25 மணிக்கு மன்னார்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (06180) மன்னார்குடியில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.