Regional03

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

ஆம்பூர் அருகே அடயாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கன்றாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி மணிகண்டன் (40). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு அருகே வந்த போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு சென்றது.

இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT