Regional02

நீலகிரியில் 4 பேர் வேட்புமனு தாக்கல் :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் எம்.பாபு ஜோசப் என்ற சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்தார். குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன், குன்னூர் சார்-ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், குன்னூர் நகரச் செயலாளர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய குன்னூர் லாலி அரசு மருத்துவமனை பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். மாற்று வேட்பாளராக ராமச்சந்திரனின் மகன் மதுசூதனன் வேட்புமனு தாக்கல் செய்தார். கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ர.கேதீஸ்வரன், கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

SCROLL FOR NEXT