திமுக தலைமையிலான ஜனநாயக மதச் சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாவட்ட செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மக்கள் உணர்கின்றனர். இதனை மாற்ற, ஜனநாயக மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு பணியாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.