Regional03

நலம் விசாரித்து கொண்ட அதிமுக, அமமுக வேட்பாளர்கள் :

செய்திப்பிரிவு

சிவகங்கை கோட்டாட்சியர் அலு வலகத்தில் நேற்று சிவகங்கை தொகுதி அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அமமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு தேர்தல் நடத் தும் அலுவலர் அறையில் இருந்து வெளியே வந்தார்.

அதே சமயத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள் வந்தார். நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்ட இருவரும் ஒருவரை யொருவர் நலம் விசாரித்துக் கொண் டனர். அரசியலில் இரு கட்சிகளும் எதிரும், புதிருமாக இருந்தாலும் வேட்பாளர்கள் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதை அங்கிருந்தோர் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

SCROLL FOR NEXT