சேலத்தில் 3 டன் வெள்ளைக் கல்லுடன் லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு ஏற்காடு அடிவாரம் செட்டிச்சாவடி சுண்ணாம்புகரடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தினர். ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு தப்பினார். லாரியை சோதனை செய்ததில், 3 டன் வெள்ளைக்கல் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியுடன் வெள்ளைக்கல்லை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, தப்பி ஓடிய ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் யார் என்பது தொடர்பாக போலீஸார் விசராணை நடத்தி வருகின்றனர்.