Regional01

தேர்தல் அதிகாரிகள் ஆய்வு :

செய்திப்பிரிவு

சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய பகுதிகளில் பாளையங்கோட்டை சட்டப் பேரவை தொகுதி தேர்தல்நடத்தும் அலுவலர் ஜி.கண்ணன், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தார். மாநகர காவல்துணை ஆணையர் சீனிவாசன், உதவி ஆணையர்கள் சதீஸ்குமார், மணிகண்டன், விஜய்மக்கள் இயக்க மாவட்ட தலைவர்சஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை தேர்தல் நடத்தும் அலுவலருடன், மாநகர காவல் ஆணையர் அன்பு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT