சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகுழுக்கள்,9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே வேளாண்மைதுறை அதிகாரி சகாயமேரி தலைமையிலான தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஒருகாரில் முறையான ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 420 பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயராஜ் துரைராஜ் தேவாசீர் தலைமையிலான குழுவினர் எட்டயபுரம் சாலையில் மாப்பிளையூரணி சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்து ஆயிரத்து 100 பணத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் 25 இடங்களில் மொத்தம் ரூ.91,63,670 ரொக்கப் பணத்தையும், ரூ.41 ஆயிரம் மதிப்பிலான கட்சிக் கறை வேட்டிகள், தொப்பிகளையும் பறிமுதல் செய்தனர்.
தென்காசி