Regional02

நோட்டீஸ், போஸ்டர் அச்சிட 20% கட்டணம் உயர்வு : கிருஷ்ணகிரி மாவட்ட அச்சக உரிமையாளர் நலச்சங்கம் முடிவு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் உள்ள அச்சகங்களில் நோட்டீஸ், போஸ்டர், பில் புத்தகங்கள் அச்சிட 20 சதவீதம் கட்டணம் உயர்த்த அச்சக உரிமையாளர் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.

கிருஷ்ணகிரியில், அச்சக உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாது தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா ஊரடங்கின் போது அச்சகங்கள் தொழில் இல்லாமல் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அச்சக உரிமையாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் அச்சக தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களான காகிதம், மை, பைண்டிங் பொருட்கள் விலை 20 முதல் 25 சதவீதம் மேல் உயர்ந்துள்ளது.

இதே போல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆர்ட் காகிதம் விலையும் டன்னுக்கு ரூ.15 ஆயிரம் உயர்ந்துள்ளது. ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள அச்சகங்கள், மூலப்பொருட்கள் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, வாடிக்கையாளர் களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நோட்டீஸ், போஸ்டர், பில் புத்தகங்கள் உள்ளிட்டவை அச்சிட 20 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இக் கூட்டத்தில் நிர்வாகிகள் ரவிபாரதி, பெரியசாமி, வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT