பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் சோதனை மேற்கொள்ளும் போலீஸார். 
Regional01

மரக்காணம் அருகே ரொட்டிகள் எடுத்துச் செல்வதுபோல் - மதுபாட்டில்கள் கடத்திய லாரி பறிமுதல் :

செய்திப்பிரிவு

மரக்காணம் அருகே மது பாட்டில் கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீ ஸார் நேற்று காலை தாழங்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற் கொண்டனர்.

சோதனையில், ரொட்டிகள் அடைக்கப்பட்ட டிரேக்கள் அடுக் கப்பட்டிருந்தன. அவைகளை வெளியே எடுத்து வைத்து பார்த்த போது 89 அட்டை பெட்டிகளில் 8,900 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

அவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர் பாக சென்னை தரமணியைச் சேர்ந்த சத்தியநாராயணன் (29) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் மது பாட்டில்கள் ரூ. 10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT