பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 22-ம் தேதி காலை 10.20 மணிக்கு திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
திருவிழாவில் திருக்கல்யாணம் மார்ச் 27-ம் தேதி இரவு 7.15 மணிக் கும், வெள்ளித் தேரோட்டம் அன்று இரவு 9 மணிக்கும் நடைபெறும். பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 28-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மார்ச் 31-ம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
திருவிழாவுக்கு வரும் பக்தர் களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த ஆலோ சனைக் கூட்டம் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக பழநி பேருந்து நிலையம், கோயில் அலு வலகம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயில் அலுவலகத்தில் பக்தர்களின் அவசர உதவிக் காக கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது. பக்தர்கள் 1800 425 9925, 04545-240293 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
பக்தர்கள் நீராடுவதற்காக இடும்பன் குளம், சண்முகநதியில் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
திருவிழாவில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் பழநி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அப்புக்குட்டி, கோயில் இணைஆணையர் (பொறுப்பு) குமரதுரை, உதவி ஆணையர் செந்தில்குமார், பழநி கோட் டாட்சியர் ஆனந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.