Regional01

தேர்தல் நடத்தை விதிமீறல் திமுக, அமமுகவினர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, திமுகவினர் மீது எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோன்று, சிவகாசி பள்ளபட்டி சாலையில் அரசு அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தலைவர்கள் படத்துடன் விளம்பரப் பலகை வைத்ததாக, புதிய தமிழகம் கட்சியின் சிவகாசி கிழக்கு ஒன்றியச் செயலர் செல்வராஜ் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விருதுநகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, மதுரை சாலையில் பட்டாசு வெடித்தும் கட்சிக்கொடியுடன் விளம்பரம் செய்து வந்ததாகவும் கூறி, அமமுகவினர் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT