Regional01

கரூர் அருகே ரூ.5.25 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

கரூர் அருகேயுள்ள மண்மங் கலம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமக்கல் மாவட்டம் லத்துவாடியைச் சேர்ந்த என்.கே.சுப்பிரமணியன் முட்டை லாரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.5,25,025 தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம் பிரிவு சாலை அருகே, நக்க சேலத்தைச் சேர்ந்த சரவணன்(45) என்பவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற ரூ.2,07,800-ஐ உரிய ஆவணங்கள் இல்லாத தால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT