Regional01

பறக்கும்படை சோதனையில் ரூ.4.40 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே இலஞ்சி பகுதியில் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, சோதனையிட்டனர்.

ஆட்டோவில் இருந்த குருவன்கோட்டையைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சிலம்பரசன் என்பவரிடம் ரூ.4.40 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது.

SCROLL FOR NEXT