Regional02

வேட்டவலம் அருகே ரூ.2 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

வேட்டவலம் அருகே ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

தி.மலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த சாணிப்பூண்டி கூட்டுச் சாலையில், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் சென்னை கொட்டிவாக்கம் பகுதி யில் வசிக்கும் புருஷோத்தமன், சென்னை திருவான்மியூர் பகுதியில் வசிக்கும் தீன தயாளன் ஆகியோர் என்பதும், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT