தேர்தல் 2021

புதுவை திமுகவில் முதல்கட்டமாக 12 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கட்சிகள் இடையே தொகுதிப் பங் கீடு பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், திமுக அதிக தொகு திகள் ஒதுக்க வேண்டும் என கேட் டதால் தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது.

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில்காங்கிஸூக்கு 15 இடங்களும்,திமுகவுக்கு 13 இடங்களும், கூட்டணிக் கட்சிகளுக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தஇரு இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட், விசிக தலா ஒரு இடத்தைப்பகிர்ந்துகொள்ளும் என அறிவிக் கப்பட்டது. இதில், சிபிஎம் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படாததால்,அக்கட்சி அதிருப்தி யில் இருப்பதாகத் தகவல் வெளி யாகியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 தொகு திகளில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக் கப்பட்டனர். இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் நேற்று பட்டியல் வெளியிட்டுள்ளது.

12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகூர் தொகுதிக்கான வேட் பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில், உருளை யன்பேட்டை தொகுதியில் கடந்ததேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ வான, தெற்கு மாநில அமைப்பாளர் சிவா, இந்த முறை தொகுதி மாறி வில்லியனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்பி. சிவக்குமார் கடந்த தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் நின்று தோல்வியை தழுவினார்.

இதனால் சொந்த தொகுதியான ராஜ்பவன் தொகுதியில் போட்டி யிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டு வந்தார். அதன்படி அவருக்கு ராஜ்பவன் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல் கடந்த முறை தேர்தலில் வாய்ப்புவழங்கப்பட்ட 6 பேருக்கு மீண்டும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை.

மீதமுள்ள காலாப்பட்டு, திருபுவனை, உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித் தோப்பு, நிரவி-திருப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகளுக்கு புதிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. நிரவி திருப்பட்டினம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு எம்எல்ஏவான கீதா ஆனந்தனுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT