Regional01

பறக்கும் படையினர் சோதனையில் சேலத்தில் ரூ.98 ஆயிரம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

சேலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.98 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சேலம் ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிடிஓ ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பெங்களூருவைச் சேர்ந்த மனோஜ் (21) என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் செய்ய உரிய ஆவணமின்றி காரில் ரூ.98 ஆயிரம் எடுத்து வந்தது தெரிந்து பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT