Regional02

மணல் கடத்திய லாரி பறிமுதல் :

செய்திப்பிரிவு

குருபரப்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸார், குந்தாரப்பள்ளி அடுத்த சாமந்தமலைக்கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் சோதனை நடத்தினர். அதில் 4 யூனிட் மணல் இருந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT