மாசி அமாவாசையையொட்டி, சேலம் மரவனேரி காக்காயன் மயானத்தில் நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், காளி வேடமணிந்து ஊர்வலாக வந்தவர் பக்தர்களின் மீது நடந்து சென்றார். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

சேலத்தில் மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் - அங்காளம்மன் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலம் :

செய்திப்பிரிவு

மாசி அமாவாசையை முன்னிட்டு, சேலத்தில் நடந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் பக்தர்கள் அம்மன் வேடமிட்டு உயிருடன் ஆடு, கோழிகளை கடித்தபடி ஊர்வலமாக மயானத்துக் சென்று வழிபட்டனர்.

சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முனியப்பன், அங்காளம்மன், பெரியண்ணன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களின் கோயில்களில் மயானக் கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

வேண்டுதல் வைத்த பக்தர்கள் அங்காளம்மன் வேடமிட்டு சேலம் ஆற்றோரம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டு சேலம் ஆனந்தாபாலம், காசிமுனியப்பன் கோயில் வீதி வழியாக அணைமேடுகடந்து காக்காயன் மயானத்தை நோக்கிச் சென்றனர். வழியில் நேர்த்திக்கடனாக பொதுமக்கள் உயிருடன் வழங்கிய ஆடு, கோழிகளை கடித்து ரத்தத்தை உறிஞ்சியபடி மயானம் சென்று வழிபட்டனர்.

SCROLL FOR NEXT