சேலத்தில் மர்மமான முறையில் பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாப்பேட்டை பாலாஜி நகர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாட்ஷா. இவரது மனைவி உமைபானு (45). இவர் சுகவனேஸ்வரர் கோயில் வணிகவளாகத்தில் துணிக் கடை நடத்தி வந்தார். மேலும், முஸ்லிம் மகளிர் கூட்டுறவு சங்கத்தில் கவுரவச் செயலாளராக பதவி வகித்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உமைபானு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.