Regional01

நகை பறிப்பை தடுத்த மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குமாரபாளையம் விட்டலபுரியைச் சேர்ந்தவர் ராஜ் (43). இவரது ஜவுளி நிறுவனத்தில் அம்மன் நகரைச் சேர்ந்த பிரதீப் (18) என்பவர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஜவுளி நிறுவன உரிமையாளரின் மகளான கல்லூரி மாணவியின் நகையை பறிக்க முயன்றார்.

அப்போது, மாணவி தடுத்ததால் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். மாணவியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி இளைஞர்கள் அவரை துரத்தி சென்று பிடித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT