Regional02

இயற்கை ஆர்வலர் கள்ளூர் கருப்பையா மரணம் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை ஆர்வலர் கருப்பையா(92). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை உட்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏராளமான மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார். இவரது செயலை ஆட்சியர்கள், எஸ்பிக் கள், தன்னார்வ அமைப்பினர் என பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு கருப்பையா உயிரிழந்தார். நேற்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு இயற்கை ஆர்வலர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT