Regional03

அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.

முன்னதாக கோயிலிலிருந்து அம்மன் மலர் களால் அலங்கரிக்கப்பட்டு, பாளையம் மேம் பாலம் அருகே தோப்பு பகுதியில் உள்ள மயா னத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். பின்னர், அங்கு கிடா வெட்டி, அதன் ரத்தம் கலந்த அரிசி சாதத்தை அள்ளி வீசினர். அதை அங்கு திரண்டிருந்த பெண்கள் மடியேந்தி பெற்றுக்கொண்டனர். இவ்வாறு செய்வதால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கும், திருமணத் தடை உள்ளிட்டவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

SCROLL FOR NEXT