தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாது காப்பு பணிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பி க்கை ஏற்படுத்தும் வகையில், காவல்துறை மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
அதன்படி, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் எஸ்பி சுகுணாசிங் உத்தரவின் பேரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் மேற்பார்வையில் நடைபெற்ற அணிவகுப்பில் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் கலந்துகொண்டனர். கடைய நல்லூர், மேலக்கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி