திருச்செந்தூரில் பெண்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார். மகளிர்திட்டத்தின் மூலம் வரையப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வுரங்கோலி கோலத்தை பார்வையிட்டார். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்து பங்கேற்றார். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லெட்சுமணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிச்சை, வட்டாட்சியர்கள் முருகேசன், இசக்கிராஜ்மற்றும் மகளிர் சுய உதவிக்குழுஉறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.