தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர்களை பிரச்சாரத்தை தொடங்கினர்.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் பெ.கீதாஜீவன் நேற்றுகாலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்குதிமுக தொண்டர்கள் வரவேற்புஅளித்தனர். பின்னர் தொண்டர்களுடன் அவர் ஊர்வலமாகச் சென்று நகரில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து தனது தந்தை என்.பெரியசாமி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார்.
விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி.மார்க்கண்டேயன் எட்டயபுரம் வழியாக விளாத்திகுளம் வந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் வைப்பாற்றுப்பாலம் அருகே உள்ள ஆனந்த விநாயகர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு அவர் பிரச்சாரத்தை தொடங்கி னார்.
இதுபோல் திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.