புனித வெள்ளியை முன்னிட்டு தி.மலை உலக மாதா தேவாலயத்தில் இருந்து கிறிஸ்தவர்களின் தவக்கால புனித யாத்திரை நேற்று தொடங்கியது.
தி.மலை, கீழ் பென்னாத்தூர் வட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். உலக மாதா தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரையை பங்குத்தந்தை ஞானஜோதி தொடங்கி வைத்தார்.
பல்வேறு கிராமங்கள் வழியாக 25 கி.மீ., தொலைவு பாத யாத்திரை யாக, விருது விளங்கினான் கிராமத்தில் உள்ள காட்டு கோயில் என்றழைக் கப்படும் புனித அந்தோணியார் தேவாலயத்தை சென்றடைந்தனர்.
யாத்திரை செல்லும் வழியில் திருப்பலி பாடல்களை பாடியப்படி கிறிஸ்தவர்கள் சென்றனர். பின்னர் அவர்கள், காட்டு கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.