ஏடிஎஸ்பி கண்ணப்பன். 
Regional01

ஏடிஎஸ்பி கண்ணப்பன் மாரடைப்பால் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (ஏடிஎஸ்பி) பணியாற்றி வந்தவர் கண்ணப்பன் (58). கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் சிஎம்சி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும், அங்கு அவருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இருதய அடைப்பு காரணமாக ஆன்ஜியோபிளாஸ்ட் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டில் மருத்துவ விடுப்பில் ஓய்வில் இருந்தவருக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று பிற்பகல் 1 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந் தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், லாவண்யா, சஞ்சு என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

SCROLL FOR NEXT