வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நடந்த தேசிய அறிவியல் தின விழாவில் சிறப்பு விருந்தினருக்கு பரிசு வழங்கிய கல்லூரி நிறுவனர் முனிரத்தினம். அருகில், முதல்வர் முனைவர் மைதிலி உள்ளிட்டோர். 
Regional03

அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் - தேசிய அறிவியல் தினம் :

செய்திப்பிரிவு

தேசிய கதிரியக்க பாதுகாப்பு அமைப்பு, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம் மற்றும்  அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் தேசிய அறிவியல் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இயற்பியல் துறை தலைவர் செல்வகுமார் வரவேற்றார். கல்லூரி நிறுவனர் முனிரத்தினம் முன்னிலை வகித்தார். முதல்வர் முனைவர் மைதிலி வாழ்த்துரை வழங்கினார். இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலைய இணை இயக்குநர் ஆத்மலிங்கம், ராம்ஸ் தலைவர் மேனகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். எக்ஸ் கதிர், அணுஉலை மாதிரிகள் மற்றும் கதிரியக்கம் குறித்த கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

விநாடி -வினா போட்டி, பேச்சு போட்டி, ஓவியப் போட்டி, ஸ்லோகன் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரி செயலாளர் ரமணன், அறிவியல் சங்க தலைவர் கோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இறுதியில், இயற்பியல் துறை பேராசிரியர் குமரன் நன்றி கூறினார். 

SCROLL FOR NEXT