Regional01

மன நலம் சரியில்லாத மூதாட்டி மீட்பு :

செய்திப்பிரிவு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அஞ்சல் நிலையம் அருகே, சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தங்க நகைகளை அணிந்தபடி சுற்றித் திரிவதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் விசாரித்ததில், அவரது பெயர் ராஜம்மாள் என்பதும், மன நலம் சரியில்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூதாட்டியை மீட்ட போலீஸார், மாநகராட்சி இரவு விடுதியில் சேர்த்தனர். தொடர்ந்து விசாரித்ததில், அவரது சகோதரி சுப்புலட்சுமி, சரவணம்பட்டியில் வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா அறிவுரைப்படி, திருமால் நகர் நல கண்காணிப்பு அலுவலர் கருப்பையா மற்றும் அலுவலர்கள், மூதாட்டியை அவரது சகோதரியிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT