திருப்பூர் எஸ்.ஏ.பி. சிக்னல் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட அரிசி மூட்டைகளை பார்வையிட்ட பறக்கும் படையினர். 
Regional02

அரிசி மூட்டைகள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஏ.பி. சிக்னல் பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தி ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில் பெருந்தொழுவை சேர்ந்த கொசுரா (36) என்பதும், குமார்நகருக்கு கொண்டு செல்வதற்காக 252 மூட்டைகள் அரிசி இருந்ததும் தெரியவந்தது.

இதற்கான ஆவணம் இல்லாததால், 252 மூட்டைகளில் இருந்த 4750 கிலோ அரிசியை பறிமுதல் செய்து, திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரித்து வருவதாக கோட்டாட்சியர் ஜெகநாதன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT