சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வேட்பாளர்கள் செலவிடும் தேர்தல்செலவினங்களை கண்காணிப்பதற்கான அலுவலர்களுக்கு பயிற்சிக் கூட்டம் திருப்பூர் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நடத்தை விதிமுறைகள் மற்றும் செலவினங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ பார்வைக் குழுக்கள், உதவி செலவினப் பார்வையாளர்கள், கணக்கீட்டுக் குழு மற்றும் கணக்கு குழுக்கள், ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள், சிறந்த முறையில் பணியாற்றுவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை அலுவலர்க சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு, தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.