கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1.43 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலையில் நேற்று காலை காவேரிப்பட்டணம் இளநிலை பொறியாளர் சவுந்தரராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சிவா என்பவர் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி சார்நிலை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.