Regional03

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: தபால் வாக்குகள் அளிக்க படிவம் வழங்கச் செல்லும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என பர்கூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சண்முகம், குமரவேல், தனி வட்டாட்சியர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பேசியதாவது:

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக் கப்பட்டவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்குகள் அளிக்கலாம். தபால் வாக்குகள் அளிக்க கட்டாயப்படுத்தக் கூடாது. எனவே, தபால் வாக்குகள் அளிக்க விருப்பமுள்ளவர்களுக்கு அதற்கான படிவம் 12-டி வழங்கச் செல்லும் வாக்குச்சாவடி அலு வலர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT