இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக இம்ரான் அமின் சித்திக் பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு இதே வங்கியில் வளங்கள் மற்றும் அரசு உறவுகள் பிரிவுகளின் பொது மேலாளராக பணிபுரிந்தவர்.
சித்திக் கான்பூரில் உள்ள ஹர்கார்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். மேலும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கர்ஸ் சான்றளிக்கப்பட்ட அசோசியேட்டாகவும் உள்ளார். இவர் கடந்த 1987-ம் ஆண்டு அலகாபாத் வங்கியில் கள அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கடந்த 33 ஆண்டு வங்கிப் பணியில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
குறிப்பாக கொல்கத்தா நகரம், பராசத் நகரங்களில் மண்டல மேலாளராக பணியாற்றியுள்ளார். மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் கள பொது மேலாளராகவும் இருந்துள்ளார். பல்வேறு கார்ப்பரேட் அலுவலகம், தலைமை அலுவலகங்களில் கடன் பிரிவு, கடன் கண்காணிப்பு பிரிவுகளில் பணியாற்றிஉள்ளார்.