சுதந்திர உணர்வு புதுச்சேரியின் ஒவ்வொரு துகளிலும் இருக்கிறது என ஆளுநர் தமிழிசை தெரிவித் துள்ளார்.
நாட்டின் சுதந்திர தின 75-வது ஆண்டு நிறைவு விழா 2022ஆகஸ்ட் 15-ம் தேதி வருகிறது. அதற்கு முந்தைய 75 வாரங்க ளுக்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் விமரிசையாகக் கொண்டாடுமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி புதுச்சேரியில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. கடற்கரை சாலை காந்தி சிலை அருகே கடலில் 75 படகுகள் தேசியக் கொடியுடன் பேரணி, 75 மாணவர்கள் பங்கு பெற்ற சைக்கிள் பேரணி ஆகியவற்றை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தலைமை செயலகம் எதிரில் மரக் கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
இதேபோல் தண்டி யாத்திரை தொடக்க நாளின் 91-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் என்எஸ்எஸ் மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியையும் ஆளுநர் தமிழிசை ஆரம்பித்து வைத்தார். விடுதலை போராட்ட வீரர்களை கவுரவித்து பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமி ழிசை பேசியதாவது:
75-வது சுதந்திர தின நிறைவை இன்றிலிருந்து 75 வாரங்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் பகுதியாக இன்று (நேற்று) தண்டி யாத்திரை நடந்த தினம். ஆகவே இந்த தினத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். நேற்றைய (நேற்று முன்தினம்) தினம் தியாகி சுந்தரமூர்த்தி என்பவரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தேன்.
நம்முடைய தேச கொண்டாட் டத்தில் அனைவரும் இணைய வேண்டும். புதுச்சேரி மண் ஆன்மிக பூமி. ஆதே நேரத்தில் தேசிய பூமி. இந்த பூமியில் அரவிந்தர் வாழ்ந்து ஆன்மிகத்தையும், தேசியத்தையும் வளர்த்தார். பாரதி போராட்டத்தை வீரியப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக பாரதிதாசன் இருந் தார். அன்னை வாழ்ந்த மண். இந்த மண் சுதந்திர களத்தை கொடுத்தமண். சுதந்திர உணர்வு புதுச்சேரி யின் ஒவ்வொரு துகளிலும் இருக்கிறது.
அதனால் சுதந்திர கொண்டாட்டம் 75 வாரங்கள் நடப்பதற்கு அனை வரும் துணைபுரிய வேண்டும். இன்னும் கரோனா தொற்று முழுமையாக போகவில்லை. அனை வரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.டி.மகேஸ்வரி, தலைமை செயலாளர் அஸ்வணி குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நம்முடைய தேச கொண்டாட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும்.