Regional03

திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவுக்கு ‘சீட்’மறுப்பு : ஆதரவாளர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணனுக்கு மீண்டும் போட்டியிட ‘சீட்’ வழங் காததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-வாக இருப்பவர் டாக்டர் சரவணன். இந்த முறை திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மற்ற தொகுதிகளிலும் போட்டியிட சரவணனுக்கு ‘சீட்’ வழங் காததால் அவரும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்தனர்.

திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானநிலையில் ‘சீட்’ வழங்காததால் சரவணன் ஆதரவாளர்கள் அவனியா புரத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர் சரவணனுக்கு ‘சீட்’ வழங்க தலைமை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT