பெரம்பலூர்: பெரம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உலக நன்மைக்காக நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் சிவஜோதி ஏற்றப்பட்டது. மலை அடிவாரத்தில் நேற்று அதிகாலை வரை நான்கு கால யாக பூஜை நடைபெற்றது, பின்னர், நேற்று காலை உலக மக்கள் நலன் கருதி இயற்கை சீற்றத்தின் தாக்கம் குறையவும், பெரும்நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் கோமாதா பூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தர்கள் யாகம், காகன்னை ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.