கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஒரு வாகனத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லையை ஒட்டுகிறார் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், எஸ்.பி. எஸ்.எஸ்.மகேஸ்வரன் உள்ளிட்டோர். 
Regional01

வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் :

செய்திப்பிரிவு

கரூரில் வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் எந்த ஒரு வாக் காளரும் விடுபடாமல் நேர்மை யுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக் களுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வாக்களிப்பதன் முக்கியத்து வத்தை உணர்த்தும் வகையி லான விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் வாகனங்களில் ஒட்டும் நிகழ்ச்சி கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சிய ருமான சு.மலர்விழி ஆட்டோ, ஷேர் ஆட்டோ, சரக்கு வாகனம் உள் ளிட்ட பல்வேறு வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டினார்.

இதில், மாவட்ட எஸ்பிஎஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மகளிர் திட்ட இணை இயக்குநர் வாணிஈஸ்வரி, வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT