Regional02

பேராவூரணி தொகுதியில் வேட்பாளரை மாற்றக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.திருஞானசம்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதியின் தற்போதைய அதிமுக எம்எல்ஏவான மா.கோவிந்தராசுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதேபோல, போட்டியிட விருப்ப மனு வழங்கியிருந்த முன்னாள் எம்எல்ஏ குழ.செல்லையா மகனும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளருமான குழ.செ.அருள்நம்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த குழ.செ.அருள்நம்பி ஆதரவாளர்களான 50 பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில், பேராவூரணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று, அண்ணா சிலை அருகில் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

அப்போது, குழ.செ.அருள்நம்பிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருஞானசம்பந்தத்தை திரும்பப் பெறவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல, கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியை கூட்டணி கட்சியான மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, கும்பகோணத்தில் உள்ள எம்ஜிஆர் படித்த யானையடி நகராட்சி தொடக்கப் பள்ளி முன்பு அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT